நேற்று வரை “வாட்நகர் நாயகன்” இன்று “கங்கை கொண்டான்”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., ஏ.ஏ.ரஹீம் கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வு திட்டத்திற் காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய அமைச்சகம் அறிக்கை மூலம் பதில் அளித்தது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் (2020 - 2024) இந்திய தொல்லியல் துறை 17 மாநிலங்களின், 58 அக ழாய்வு தளங்களுக்கு ரூ.34.81 கோடி செல வழித்துள்ளது. இதில் 25% நிதியை குஜராத்துக்கு ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் அகழாய்வுக்காக ரூ.8.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத்து க்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.8.53 கோடியில் இது 94% என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊருக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கியதற்கு சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வுப் பணி களுக்கான மொத்த நிதியில் 25 சத வீதத்தை (ரூ. 8.53 கோடி) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது. அதிலும் 94 சதவீதத்தை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட்நகரில் மட்டும் செலவிட்டுள் ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டுள்ளது வெறும் 9.8% மட்டுமே. நேற்று வரை “வாட்நகர் நாய கனாக” இருந்து விட்டு இன்று “கங்கை கொண்டானாக” மாறிவிட்டதாக நம்பச் சொல்கிறார்கள்” என அவர் கூறி யுள்ளார்.